search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் இடமாற்றம்"

    • சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.
    • 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் பணியில் சேர்ந்த காலங்கள் முதல் 100 சதவீதம் தேர்ச்சியும். மாணவர்களின் கற்றல் மற்றும் விளையாட்டு யோகா போன்றவர்கள் தனி ஆர்வம் கொண்டு காலை மாலை என சிறப்பு வகுப்புகள் எடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றார்.

    இந்த பள்ளியில் 50 மாணவர்கள் என்ற நிலையில் இருந்த இப்பள்ளியானது தற்பொழுது 150 மாணவர்கள் என மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி மாணவர்களின் அன்பை பெற்ற ஆசிரியர் சத்திய சுதந்திரத்தை அவரது கிராமத்தில் தண்ணீர் செல்லும் கால்வாய்க்கு இவர் ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிகிறது.

    புகாரின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர் சத்திய சுந்தரத்தை குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த உத்தரவானது நேற்று மாலை பள்ளிக்கு ஈமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் ஆனது மாணவர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்து வகுப்புக்கு செல்லாமல் வகுப்பை புறக்கணித்து பள்ளியின் வளாகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அங்கு வந்த தலைமை ஆசிரியர் மாது, போச்சம்பள்ளி வட்டாட்சியர் அனிதா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் ஆசிரியரை பணியமர்த்த வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியதின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணியிடம் மாற்றம் உத்தரவானது புகார் நிரூபிக்கப்பட்டால் தொடரும். இல்லையெனில் அந்த உத்தரவு ரத்து செய்து அவரை மீண்டும் அதே பள்ளியில் அமர்த்த வாய்ப்புள்ளது என்றார்.

    ×